...
நாவல் .....
புதிர்மை -புரியாமை ............. பதார்த்த ஸாரம்.......
புதிர்மையும் -புரியாமையும் நவீன நாவலின் இரட்டைகள். ஒன்றைத் தொட்டால் மற்றொன்று சிணுங்கும் சிணுங்கிகள். இதில் யார் யாரைக் கெடுக்கிறார்கள் என்று அறிவது கடினமான காரியம். ஒன்று செய்யும் சேட்டைக்கு மற்றொன்று தண்டிக்கப் பெறுவது ஒரு வகை முரண்நகை. சரி; புதிர்மையும் புரியாமையையும் அழகிய ஆள்மாற்றட்டத்தில் நிலை கலங்கி வாசித்துவிட்டாலும் அதற்கான பழியை வாசகர்கள் சுமப்பதில்லை. சுலபமாக பிரதிமீது சுமத்திவிட்டு நகர்ந்துவிடலாம்.
ஒரு நாவலின் கதையாடல் நூற்கும் இழையை ஒன்றின் ஊடாக ஒன்றை எண்ணற்ற
முறை நுழைத்துவிட்டால்; நாவலின் நேர்கோட்டுத் தர்கத்தை வேறொரு தர்க்க அடுக்கிற்க்கு
நகர்த்திவிடலாம். நகர்த்திப் போடுவதும் அதனைத் தொலைத்துவிட்டு தேடுவதும்
ஒருவிதத்தில் பார்த்தால் வாசகன் தன்னை பிரதியோடு மறு-ஒப்பனை செய்து கொண்டு
ஆசிரியனைப் அகழ்ந்து அவனது சுய-பிரக்ஞையை செயலிழக்கச் செய்வதுதான்.
புதிர்மைக்க்குள்ளும் - புரியாமைக்குள்ளும் அகப்படாது இரண்டையும்
திகைக்கச் செய்யும் நாவல் பிரதிகள் பல உள்ளன. இன்றைய நவீன நாவல் வாசகனையும் அவனது
வாசிப்பின் நேர்த்தியைப் பரிகசிக்கும் பிரதிகளில் ஜேம்ஸ் ஜாய்ஸின் ' Ulysses' ' Finnegans Wake' நாவல்கள். மனித மனம் இப்படி பரிகசிப்பவையை விடாமல் பின் -
தொடர்ந்து சென்று ;அதில் சட்டென்று நிகழும் கண்சிமிட்டலில் அறிதல்
புலத்தில்........................................இரசவாதம் நிகழ்கிறது.
யுலிஸஸ் நாவலை வாசிக்க உறுதுணையாக நிறைய நூல்கள் எழுதப்பட்டுள்ளன.
அவை நாவலின் கவித்துவக் கட்டமைப்பையும் அதன் உள்ளார்ந்துள்ள சட்டகங்களை அறிந்து
கொள்ள உதுவுகிறது. அப்படி ஒரு புத்தகம் James Joyce 's Ulysses (A Study by : Stuart Gilbert ) இந்நூலை ஜாய்ஸ் மேற்பார்வையில் எழுதியது. இதில் ஜாய்ஸின் எழுத்துக்
கிரமத்தை புரிந்து கொள்ள சொல்லும் வரிகள்.
”Joyce depicts only the present time and place of the times and
places that are passing , a rapid flux of images."
"Hold ot the now the here , through which all future
plunges to the past".
"It is for the reader to assemble the fragments and join
the images into a band."
"Sometimes the thought of the moment , rising to the
surface of the mind under the impact of some external stimulus , is merely the
echo of a name of fragment of a phrase".
(page 25)
யுலிஸஸ் நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் அதில் பயின்றுவரும்
நுண்மையை புரிந்து கொள்ள விரிவாக இந்நூல் விவாதிக்கிறது. ஒரு
உதாரணத்திற்கு..................
3. PROTEUS
This episode contains practically no action. Nothing happens ,
and yet in following the trail of Stephen's thoughts, as hi idles on the Dublin
strand, we encounter a diversity of experience as exciting as any tale of
adventure int the "Land of Phenomena "
*************************************************************************************************
*************************************************************************************************
*************************************************************************************************
தமிழிலும்கூட புதிர்மையும் - புரியாமையும் நவீனத்துவத்தோடு - பின்
- நவீனத்துவத்தோடு ஒட்டிப் பிறந்தவை. இப்படி வாசக சிக்கலைக் கொண்ட பிரதிகள் தமிழிலும்
உள்ளன. இதைக் குறித்து நினைக்கும் போது முன்பு எப்போதோ படித்த சரவதி மகால் நூலகம்
வெளியிட்ட புத்தகமான “ பதார்த்த ஸாரம்”
நினைவுக்கு வந்தது இது ஜைன தத்துவத்தை விளக்குமுகாமாக அமைந்த நூல்
.ஸ்ரீ மகாநந்தி ஆசாரியார் அருளியது.
இதில் ஸமவஸரண மண்டலம் , காந்தகுடி , இரண்டரைத் தீவு ஜம்புத் தீவு , நந்தீஸ்வர தீவு , ஆறு லேஸ்யைகள்,ஆகிய வரைபடங்கள் அடங்கியுள்ளன.
இதை கண்ணுறும் போது ஒரு விந்தை நாவலிற்குள் புக அழைப்பது போல நம்மை இழுக்கிறது.
இந்த நூலின் உரைநடை தத்துவார்த்தத்தை புனைமொழியில் வணைகிறது. உதாரணத்திற்கு
கட்டு என்பதை விளக்குமுகமாக ....
“பல ஒன்றாகக கட்டுற்று நிற்றல்
பந்த மாகும் . இங்கே உயிரும் புற்கல வினைகளும் கட்டுற்று நிற்றலும், உயிர் மித்யாத்துவம்
முதலானவற்றால் கட்டுற்று நிற்றலும் பேசப்படுகின்றன. இக்கட்டு ‘பாவ பந்தம்’. ‘திரவிய பந்தம்’ என இரு பகுதிபடும். பாவ
பந்தத்திற்கு ஐந்து காரண்ங்களைக் காட்டுகிறார். அவை மித்தியாத்துவம் . அவிரதம், பிரமாதம் ,கசாயம், யோகம்”.
...பதினைந்து பிரமாதங்களை 63 ஆகவும் 37,500 அகவும்
விரித்துக் காட்டியுள்ளார். இப்படி பெருக்கிக் காட்டும் கணித முறையை
‘அஷரசஞ்சாரம்”
(25x25x6x5x2x=37500)
அறிந்துகொள்ள இயலாத நுண்மைகளைக்கூட இப்படி விளக்க முடியும் என்ற
சாத்தியப்பாடு உள்ளது.
அதுபோல தமிழின் நவீன நாவல்/ கவிதைகளை புரியாமைக்குள்ளிருந்து
வாசிப்பின் புதிர்மைக்கு மாற்றி மறுமுறை எழுதுதல் மூலம் மீட்டெடுக்கலாம் . இப்படி
நாம் தமிழில் உள்ள பல பிரதிகளுக்கு .........பதார்த்த
ஸாரம்.......................................................
.........................................................................................................................
பதம் - அர்த்தம்- ஸாரம் .........................
எழுத போதுமான முகாந்திரம் இருக்கிறது..
.........................................................................................................................
பதம் - அர்த்தம்- ஸாரம் .........................
எழுத போதுமான முகாந்திரம் இருக்கிறது..
-எஸ.சண்முகம்-


